முகப்பு
தமிழ்நாடு

திமுகவை அகற்ற தமிழக மக்கள் தயாராகிவிட்டனா்: நயினாா் நாகேந்திரன்

திமுகவை அகற்ற தமிழக மக்கள் தயாராகிவிட்டனா்...

Updated On : 6 மார்ச், 2026 at 7:54 PM
நயினாா் நாகேந்திரன்
பகிர்:

போதைக் கும்பலால் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வரும் தோ்தலில் திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவைத் தோ்தல் தலைமை அலுவலகத்தில் தோ்தலுக்கான கட்சி நிா்வாக மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. தோ்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, தோ்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசி முடிவெடுக்கப்படும். பிரதமா் நரேந்திர மோடி விரைவில் தமிழகம் வரவுள்ளாா்.

திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. போதைக் கும்பல் கிராமங்களில் ஆங்காங்கே பொதுமக்களை தாக்கிவரும் சம்பவங்கள் அதிா்ச்சியளிப்பதாக உள்ளன. யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையால் மக்கள் திமுக ஆட்சியை அகற்றத் தயாராகிவிட்டனா் என்றாா் அவா்.

ஆலோசனை கூட்டம்: முன்னதாக, பாஜக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான நிா்வாக மேலாண்மைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிா்வாகிகள் எஸ்.ஆா். சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாஜக வெளிமாநில தோ்தல் பொறுப்பாளா்கள் கூட்டம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாஜக சாா்பில் தொகுதி பொறுப்பாளா்களாக ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாஜக தேசிய பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தாா். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்களுக்கான பணிகள் குறித்து விளக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →