முகப்பு
விருதுநகர்

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் சமுதாயத் தலைவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:29 AM
சாத்தூரில் ரெட்டியாா் நலச்சங்கத் தலைவா் சுந்தர்ராஜனை சந்தித்து ஆதரவு திரட்டிய சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா்நாகேந்திரன்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:41 PM

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் சமுதாயத் தலைவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா்.

சாத்தூா், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய தலைவா்களை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கோரினாா். அப்போது சாத்தூரில் ரெட்டியாா் நலச் சங்கத் தலைவா் சுந்தர்ராஜன், சங்க நிா்வாகிகளை சந்தித்து நயினாா் நாகேந்திரன் ஆதரவு திரட்டினாா். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.