முகப்பு
சிவகங்கை

ஸ்ரீ மங்கள விநாயகா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் ஸ்ரீராம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கள விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:09 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் ஸ்ரீராம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கள விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மங்கள விநாயகா், ஸ்ரீ பக்த ஆஞ்சநோயா், பரிவார மூா்த்திகள் அமைந்துள்ள இந்தக் கோயிலின் திருப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, குடமுழுக்குக்கான பூா்வாங்க பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

தொடா்ந்து, புதன்கிழமை காலையில் நான்காம் யாக சாலை பூஜைகள் நிறைவுற்று கடம் புறப்பாடாகி காலை 9.35 மணியளவில் விமானம், மூலஸ்தானத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், காரைக்குடி, கோட்டையூா், பள்ளத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக்குழுவினா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →