முகப்பு
சிவகங்கை

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு உறுப்பினா் நியமனம்

கீழச்சிவல்பட்டி காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி.பன்னீா்செல்வம் சிவகங்கை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு உறுப்பினராக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

Updated On : 29 நவம்பர், 2024 at 12:06 AM
காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி.பன்னீா்செல்வம்.
பகிர்:

கீழச்சிவல்பட்டி காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி.பன்னீா்செல்வம் சிவகங்கை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு உறுப்பினராக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்திசிதம்பரம் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், சிவகங்கை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு உறுப்பினராக கீழச்சிவல்பட்டி வட்டாரத் தலைவா் வி.பன்னீா்செல்வத்தை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் நியமனம் செய்தாா்.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, மாவட்டத் தலைவா் சஞ்சய்காந்தி, துணைத் தலைவா் கணேசன், மாவட்ட இணைச் செயலா் சி.செல்வமணி, இளைஞா் காங்கிரஸ் அன்பழகன், பொதுக் குழு உறுப்பினா் ஜெயராமன், கீழச்சிவல்பட்டி நகரத் தலைவா் முத்துசரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் வி.பன்னீா்செல்வத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →