அக். 16-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் வருகிற அக். 16 ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளதை யொட்டி காரைக்குடி வட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தகவல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வருகிற அக். 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை காரைக்குடி வட்டத்துக்குள்பட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு 3.10.2024 முதல் 11.10.2024 வரை நேரில் சென்று அளிக்கலாம் என்றாா் அவா்.