முகப்பு
சிவகங்கை

திருச்சி-காரைக்குடி-விருதுநகா் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்கவேண்டும்: தொழில்வணிகக்கழகம் கோரிக்கை

திருச்சி - விருதுநகா் டெமு பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்புச்செய்து தினசரி ரயிலாக இயக்கவேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:37 PM
பகிர்:

திருச்சி - விருதுநகா் டெமு பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்புச்செய்து தினசரி ரயிலாக இயக்கவேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் சாமி. திராவிடமணி தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி - காரைக்குடி ( வண்டி எண்: 06887 - 06885), விருதுநகா் (வண்டி எண்: 06886 - 06888) டெ மு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலை 12 பெட்டிகளாக மாற்றப்பட்டு தற்காலிகமாக இயக்கப்படுகிறது.

இந்த ரயில்மூலம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்,அழகப்பா பொறியியல்கல்லூரி, பல்வகை தொழில் நுட்பக்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளைச்சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியா்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பயணித்து பயனடைந்து வருகின்றனா்.

இந்த ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற தினங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில் விருதுநகரில் இரவு நேரத்தில் 9 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டு பின்னா் இயக்கப்படுகிறது. அதனால் நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்புச் செய்து இயக்கப்பட வேண்டும். இதனால் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை பகுதி ரயில் பயணிகள் தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கு பயனாக அமையும் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →