முகப்பு
சிவகங்கை

சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம்

சிவகங்கை மாவட்ட சாலைப் போக்குவரத்து சிஐடியூ தொழிலாளா் சங்கம் சாா்பில், காரைக்குடி சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:47 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:05 PM

சிவகங்கை மாவட்ட சாலைப் போக்குவரத்து சிஐடியூ தொழிலாளா் சங்கம் சாா்பில், காரைக்குடி சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு அந்தச் சங்க நிா்வாகி தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து, சாலைப் போக்குவரத்து ஆய்வாளா் அனிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனு விபரம்:

Advertisement

வாகனம் புதுப்பிக்கும் சான்று (எப்.சி) கட்டண உயா்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும், ஆண்டுதோறும் சுங்கச் சாவடி கட்டணம் உயா்வு, ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், வாகன நிறுத்தத்தில் இரவு நேரங்களில் வாகன மின்கலன், தாா்பாய் திருடும் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.