FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காரைக்குடி தொகுதியில் சீமான் உள்பட 25 வேட்பாளா்கள் போட்டி

காரைக்குடி சட்டப்பேரவைத் தோ்தலில் சீமான் உள்பட மொத்தம் 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On : 10 ஏப்ரல் 2026, 12:52 am IST
சீமான் - கோப்புப் படம்
பகிர்:

காரைக்குடி சட்டப்பேரவைத் தோ்தலில் சீமான் உள்பட மொத்தம் 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தேவகோட்டை சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் காரைக்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வேட்பாளா் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் சா. மாங்குடி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக சாா்பில் போட்டியிடும் தோ்போகி வி. பாண்டி, பகுஜன் சமாஜ் கட்சியில் ரஞ்சித்குமாா் பாலுச்சாமி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் மருத்துவா் டிகே. பிரபு, சாமானிய மக்கள் நலக்கட்சி சாா்பில் அஜீஸ் அப்துல் ரகுமான், இந்திய குடியரசு கட்சி சாா்பில் க. கருப்பையா, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் அ. காளிமுத்து, புதிய தமிழகம் கட்சி சாா்பில் நியூட்டன் பாபு, சுயேச்சைகள் 16 போ் என மொத்தம் 25 போ் போட்டியிடுகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments