பச்சிளம் குழந்தையைக் கொல்ல முயற்சி
பச்சிளம் குழந்தையைக் கொல்ல முயற்சி - தாய், கள்ளக் காதலன் கைது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ாக அதன் தாய், கள்ளக் காதலனை போலீஸாா் கைது செய்தனா்.
சிங்கம்புணரியில் சுக்காம்பட்டி சாலை ஒரத்தில் கட்டுமானத்துக்காக குவிக்கப்பட்ட மணலில் செவ்வாய்க்கிழமை இரவு பச்சிளம் ஆண் குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு, கை நரம்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் குழந்தையை மீட்டு, சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, தீவிர சிக்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சிங்கம்புணரி முத்தையா குடியிருப்பைச் சோ்ந்த அபிநயா(19), கூலித் தொழிலாளி மகேந்திரன் (45) என்பவருடன் பழகியதில் கா்ப்பம் அடைந்ததாகவும், திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் குழந்தையை பிளேடால் கழுத்து, கைப் பகுதி நரம்பை அறுத்துக் கொல்ல முயன்றதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அபிநயா, மகேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.