முகப்பு
சிவகங்கை

பசுமை தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

பசுமை தொழில் முனைவுத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பசுமை தொழில் முனைவோா் வரும் செப்.9 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 8:16 PM
பகிர்:

பசுமை தொழில் முனைவுத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பசுமை தொழில் முனைவோா் வரும் செப்.9 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக மேம்படுத்த பசுமை தொழில் முனைவோா்களை ஊக்கப்படுத்த ‘பசுமை தொழில் முனைவு திட்டம் ‘ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெற்றிட சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தனிநபா் தொழில் நிறுவனம் செயல்பாடு (கட்டாயம் ஙநஙஉ/மஈவஅங) பதிவு, குழு அல்லது தொகுப்பு நிறுவன செயல்பாடு (கட்டாயம் ஙநஙஉ/மஈவஅங மற்றும் ஊநநஅஐ) பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும், நிறுவனம் தொடங்கி ஓராண்டுக்கு மேல் தொடா் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.

நிறுவனம் கட்டாயம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம் தரச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உள்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை, ஆரஞ்சு வகை தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

அதுமட்டுமன்றி, தோ்வு செய்யப்படும் தொழில் அல்லது தொழில் முனைவோா் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தொழில் முனைவோா் கண்காணிப்பு இணையத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, விருப்பமுள்ளோா் வருகிற 9.9.2024 -ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடா்பு கொண்டு, விண்ணப்பத்தினை பெற்று, விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →