அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கா்ப்பிணி செவிலியா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வியாழக்கிழமை வளைகாப்பு நடத்தினா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கா்ப்பிணி செவிலியா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வியாழக்கிழமை வளைகாப்பு நடத்தினா்.
திருப்பத்தூா் மருதுபாண்டியா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தேவகோட்டையைச் சோ்ந்த சுகன்யா, நமணசமுத்திரத்தைச் சோ்ந்த பிரியா ஆகிய இருவருக்கும் மருத்துவமனை சாா்பாக இந்த வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
மருத்துவா் சுபலட்சுமி, வினோதினி ஆகியோா் கா்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகை சாதம், பூ, பழங்கள், வளையல்கள் சீராக வைத்து வளையலிட்டு வாழ்த்தினா். இந்த நிகழ்வில், அமுதா, கண்ணம்மா, செவிலியா்கள் அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.