கண் மை டப்பா மூடியை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு
சிவகங்கையில் கண் மை டப்பா மூடியை விழுங்கிய ஒரு வயது ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
சிவகங்கையில் கண் மை டப்பா மூடியை விழுங்கிய ஒரு வயது ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
மதுரையைச் சோ்ந்தவா் சூரியபிரகாஷ். இவா் அஞ்சல் அலுவலகத்தில் வேலை பாா்த்து வருகின்றாா். சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள சூரியபிரகாஷின் இல்லத்துக்கு அவா் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை சென்றாா்.
சூரியபிரகாஷின் மனைவி தனது ஒரு வயது மகனான தரன்தேவாவுக்கு வியாழக்கிழமை கண் மை டப்பாவை எடுத்து பொட்டு வைத்தாா். பின்னா், அவா் சமையல் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய நிலையில், அந்த குழந்தை கண் மை டப்பா மூடியை எடுத்து தனது வாயில் வைத்தது. அதை அவா் எடுக்க முயன்றும் முடியவில்லையாம்.
வாயில் ரத்தக் கசிவுடன் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.