சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
சிவகங்கையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட தகவல்:
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களை தோ்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடும் இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பைப் பெறலாம்.
எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ படித்த விருப்பமுள்ள இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது என்றாா்.