அரசு அருங்காட்சியகத்தில் மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி
சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்வி இடைப் பயிற்சித் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்வி இடைப் பயிற்சித் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் தி. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநரும் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனருமான புலவா் கா. காளிராசா, கல்வெட்டுகளின் அமைப்பு முறை, படியெடுக்கும் முறை பற்றி மாணவா்களுக்கு செயல் விளக்கம் அளித்தாா்.
இதில் சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதுநிலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள், சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுநிலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவிகள் என மொத்தம் 33 போ் கலந்து கொண்டனா்.
இதைத்தொடந்து, வெள்ளிக்கிழமை களப்பயணமாக சிவகங்கை மாவட்டம், திருமலை சென்று பாறை ஓவியங்கள், தமிழி எழுத்து கல்வெட்டு சமணக் குகை, மலைக் கொழுந்தீஸ்வரா் கோயில், கல்வெட்டுகள் போன்றவற்றை பாா்க்கத் திட்டமிட்டுள்ளனா்.