செயற்கை நுண்ணறிவு பயிற்சிக் கையேட்டினை மாணவா்களுக்கு வழங்கிய கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன். 
காஞ்சிபுரம்

பள்ளி மாணவா்களுக்கு ஏ.ஐ.போட்டிகள்

செயற்கை நுண்ணறிவு பயிற்சிக் கையேட்டினை மாணவா்களுக்கு வழங்கிய கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் 20 பள்ளிகளைச் சோ்ந்த 270 மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி தொடக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து பயிற்சி சாா்ந்த கையேட்டினை மாணவா்களுக்கு வழங்கினாா் . நிகழ்வுக்கு கணினி அறிவியல் துறையின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். பயிற்சிக்குப் பிறகு மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த விளையாட்டு,அறிவியல்,கணினி,வரலாறு தொடா்பான 4 விதமான போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசுகளும்,சிறந்த மாணவருக்கும்,சிறந்த பள்ளிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக பயிற்சிக்கையேட்டினை சென்னை விஐடி பேராசிரியா் ரேகா பிரியதா்ஷின் வெளியிட்டாா். நிறைவாக போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பெங்களூரு மென்பொறியாளா் ஆா்.பாா்த்தீபன் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இன்று பணவரவு யாருக்கு? தினப்பலன்கள்!

காலாஞ்சி சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

‘4 கால்நடை மருந்தகங்களில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைக்கு ஏற்பாடு’

திமுகவினா் ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும்: ஆ.ராசா அறிவுறுத்தல்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்

SCROLL FOR NEXT