முகப்பு
சிவகங்கை

ஆம்பக்குடி கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள ஆம்பக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு ரூ. 15.60 லட்சத்தில் நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:46 PM
காரைக்குடி அருகேயுள்ள ஆம்பக்குடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள ஆம்பக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு ரூ. 15.60 லட்சத்தில் நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா். காரைக்குடிதொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்தாா்.

தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆா். சுந்தரராசன், ஆம்பக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் பாலாமணி, ஒன்றியக்குழு உறுப்பினா் சொக்கலிங்கம், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பொதுமக்கள், பயனாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →