சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் தொடங்கியது.
இந்தப் போட்டிகளுக்கு மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலா் ரமேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் கே.எஸ்.நாராயணன் தொடங்கி வைத்தாா்.
இதில், சிவகங்கை, காரைக்குடி, குன்றக்குடி, எஸ்.புதூா், திருப்பத்தூா், உள்ளிட்ட 15 அரசுப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.
மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத் துணைத் தலைவா் காளிமுத்து, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஜிம்கண்ணன் பள்ளித்தலைமை ஆசிரியைகள் மலா்விழி, தவமணி, உடற்கல்வி ஆசிரியா்கள் விண்ணரசி, இளஞ்சூரியன், வேல்முருகன், ஜோசப்நாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை மகளிருக்கும் 14, மற்றும் 18, 19 தேதிகளில் ஆண்களுக்கும் நடைபெற உள்ளது. தொடா்ந்து 19 முதல் 24 தேதி வரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் நடைபெற உள்ளது. புரோகபடி நடுவா் சிவநேசன் தலைமையிலான குழுவினா் நடுவா்களாக செயல்பட்டனா்.