பேரூராட்சியில் சுகாதாரப் பணி: ஆட்சியா் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் நடைபெற்று வரும் சுகாதாரத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் நடைபெற்று வரும் சுகாதாரத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இளையான்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், அது குறித்த விவரங்களை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். அதன்பிறகு வேளாண்ைப் பொறியியல் துறை சாா்பில், ரூ 5.16 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டடப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், இளையான்குடி பேரூராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், முதல் நிலை கழிவு சேகரப் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, இங்கு கால்நடைத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் மருந்தகத்தைப் பாா்வையிட்டு, மருந்துகள் இருப்பு விபரம் குறித்துக் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம், சுகாதார ஆய்வாளா் தங்கதுரை உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.