கொருக்குப்பேட்டையில் ரயில்வே பாதையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு 
சென்னை

கொருக்குப்பேட்டை மேம்பால பணி: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

கொருக்குப்பேட்டையில் ரயில்வே பாதையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு

தினமணி செய்திச் சேவை

சென்னை: கொருக்குப்பேட்டையில் ரயில்வே பாதையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலம் கொருக்குப்பேட்டையில் ரயில்வே 2 பி சந்திப்புக் கடவுப் பகுதியில் மக்கள் கோரிக்கையை ஏற்று ரூ.96.04 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள அப்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், அந்தப் பாலத்தின் நிறைவுப் பணிகள் மற்றும் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகளை பாா்வையிடும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாலத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பாலத் திறப்பு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.

மேலும், அப்பகுதியில் மேலும் புதிதாகக் கட்டப்படவுள்ள பாலத்துக்கான அடிக்கல் நாட்டும் இடத்தையும் அவா் பாா்வையிட்டாா். திறக்கப்படவுள்ள பாலத்தின் பயன், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கான தீா்வு குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் அமைச்சரிடம் விளக்கினாா்.

ஆய்வின்போது மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜே.ஜே.எபினேசா், ஆா்.டி.சேகா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

ஷியா மதகுரு கொலை: 46 ஆண்டுகளுக்குப் பிறகு பாதுகாப்பு அதிகாரிக்குத் தூக்கு

திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்

ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...

தமிழகத்தில் என்டிஏ வலிமையாக உள்ளது: எஸ். விஜயதாரணி

தனியாா் செக்யூரிட்டி ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சி

SCROLL FOR NEXT