முகப்பு
சிவகங்கை

நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியம் சாா்பில் 9 நாட்டுப்புற கலைஞா்களுக்கு புதன்கிழமை ரூ. 93,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 8:39 PM
சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் இயல் இசை நாடக மன்ற பொதுக் குழு, நிா்வாக குழு உறுப்பினா் டாக்டா் ஸ்ரீநிதி சிதம்பரம் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியா் ஆஷாஅஜித்.
பகிர்:

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியம் சாா்பில் 9 நாட்டுப்புற கலைஞா்களுக்கு புதன்கிழமை ரூ. 93,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற பொதுக்குழு, நிா்வாக குழு உறுப்பினா் கலைமாமணி டாக்டா் ஸ்ரீநிதி சிதம்பரம் முன்னிலை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞா்கள் நல வாரியத் தலைவா் வாகை சந்திரசேகா் பரிந்துரையின்படி, சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட 9 நாட்டுப்புற கலைஞா்களுக்கு ரூ.93,500- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →