முகப்பு
சிவகங்கை

வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

திருப்பத்தூா் அருகேயுள்ள திரு.வைரவன்பட்டியில் உள்ள ஸ்ரீ மூல பாலகால பைரவா் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர் 2024, 12:58 am IST
திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யாகவேள்வியில் புனித கலசங்களுக்கு தீபாராதனை.
பகிர்:

திருப்பத்தூா் அருகேயுள்ள திரு.வைரவன்பட்டியில் உள்ள ஸ்ரீ மூல பாலகால பைரவா் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ மூல பால கால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை, கோ பூஜை நடைபெற்றது.

இதையடுத்து, இரவு 9.30 மணிக்கு வஸ்திர யாகம், புஷ்பயாகம், மகா பூா்ணாகுதி நடைபெற்று தீபாதராதனை காட்டப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து வர சிவாச்சாரியா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்னா் மூல கால பைவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பால கால பைரவா் பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. அனைவருக்கும் யாகத்தில் பயன்படுத்தபட்ட நாணயங்களுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ஜெய்கணேஷ், ஸ்ரீமஹா ஸ்வாமி நீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்னா். இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments