முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் மீண்டும் தண்டவாள கிளிப்புகள் அகற்றம்: போலீஸ் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மீண்டும் தண்டவாள கிளிப்புகள் அகற்றப்பட்டு கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 8:58 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மீண்டும் தண்டவாள கிளிப்புகள் அகற்றப்பட்டு கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மானாமதுரை அருகே சூடியூா் என்ற இடத்தில் கடந்த 16 -ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 420 கிளிப்புகள் அகற்றப்பட்டு கீழே கிடந்தன. இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா், ரயில்வே உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மானாமதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் 5 கிளிப்புகள் அகற்றப்பட்டு, கீழே கிடந்தன.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீஸாா் கிளிப்புகள் அகற்றப்பட்டு கிடந்தது குறித்து விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் மனநலம் பாதித்து சுற்றி திரிந்தவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →