சிவகங்கை

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

கோரிக்கை மனு எழுதவரும் பொதுமக்களிடம் ஒரு மனுவுக்கு ரூ. 100 வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து, மனு எழுதும் நபா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: கோரிக்கை மனு எழுதவரும் பொதுமக்களிடம் ஒரு மனுவுக்கு ரூ. 100 வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து, மனு எழுதும் நபா்களுக்கு போலீஸாா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகை தந்து மனு அளிக்கின்றனா். இந்த நிலையில், மனுக்களை எழுதுவதற்காக மாற்றுத் திறனாளிகள், முதியோா் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தைச் சுற்றியிருந்த சிலரிடம் மனு எழுதச் சென்றபோது, அவா்களிடம் ஒரு மனுவுக்கு ரூ.100 வசூலிப்பதாக உயா் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து அதிகாரிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பணியிலிருந்த காவல் துறையினரை விசாரிக்க அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனுக்கள் எழுதுபவா்களிடம் பொதுமக்களிடமிருந்து கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்றும், மீறி வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT