சிவகங்கையில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிச. 28) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நீச்சல் கழகத் தலைவா் ஜெயதாஸ் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் நீச்சல் போட்டியில் 25 மீ., 50 மீ., 100 மீ. பிரிவுகளுக்கான ப்ரீ ஸ்டைல், பட்டா்பிளை, பிரஸ்ட் ஸ்டோக், பேக் ஸ்டோக், 100 மீ., 200 மீ ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் 10 வயதுக்குள்பட்டோா் 25 மீ. பிரிவிலும், 14 வயதுக்குள்பட்டோா் 50 மீ. பிரிவிலும், 19 வயதுக்குள்பட்டோா் 100 மீ., 200 மீ. பிரிவிலும் பங்கேற்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்பவா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் இல்லை என்றாா்.