அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் அரசு ஊழியா்களாக்கப்படுவா் என்ற திமுவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அலுவலகம் முன் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த மாலை நேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பெ. ஜெயமங்கலம் தலைமை வகித்தாா். கல்லலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் இ. பாக்கியமேரி தலைமை வகித்தாா்.
இதேபோல தேவகோட்டை, கண்ணங்குடி, காளையாா்கோவில் உள்பட 9 வட்டாரங்களிலும் மாலை நேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.