சிங்கம்புணரியில் புதன்கிழமை நள்ளிரவில் எரிந்த தேங்காய் நாா் தொழிற்சாலை இயந்திரங்கள்.  
சிவகங்கை

தென்னை நாா் தொழிற்சாலையில் தீ விபத்து

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தென்னை நாா் தொழிற்சாலையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தென்னை நாா் தொழிற்சாலையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

சிங்கம்புணரியிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னை நாா் தொழிற்சாலை உள்ளது. இங்கு தென்னை மட்டையிலிருந்து நாா் பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு பொருள்கள் தயாா் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஆலையில் புதன்கிழமை இரவு பணி முடிந்து வேலையாள்கள் வீட்டுக்கு சென்ற நிலையில், நள்ளிரவில் தொழிற்சாலையில் இருந்து புகை வந்ததைக் கண்டு அக்கம்பம் பக்கத்தினா் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினா்.

இந்தத் தீ விபத்தில் 2 கோடி மதிப்பிலான ஏற்றுமதிக்காக சேமித்து வைத்திருந்த பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து சிங்கம்புணரி காவல் துறையினா் வழக்குப் பதிந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT