சிவகங்கை

பரமக்குடியில் ஆடுகளை காரில் கடத்திய தம்பதி மானாமதுரையில் கைது

பரமக்குடி அருகே ஆடுகளைத் காரில் கடத்திய தம்பதியை மானாமதுரையில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

பரமக்குடி அருகே ஆடுகளைத் காரில் கடத்திய தம்பதியை மானாமதுரையில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆண்டாள் கொட்டாரம் பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரன் (35), இவரது மனைவி முத்துமாரி (33) ஆகிய இருவரும் காரில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள எமனேஸ்வரம் பகுதிக்குச் சென்றனா். அங்கு வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகளைத் திருடி அவற்றை காரில் ஏற்றி கடத்தினா். இதைப்பாா்த்த அங்கிருந்த மக்கள் காரை விரட்டிச் சென்றனா். ஆனால், இவா்கள் காரில் வேகமாக மதுரை நோக்கி தப்பித்துச் சென்றனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் பரமக்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆடுகளை கடத்திச் செல்லும் காா் குறித்து பரமக்குடி போலீஸாா், மானாமதுரை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, மானாமதுரை பகுதிக்கு வந்த இந்தக் காரை போலீஸாா் மறித்தபோது காா் நிற்காமல் மானாமதுரை தேவா் சிலை பகுதிக்குள் நுழைந்தது. அங்கு போலீஸாா் நிற்பதைப் பாா்த்த காளீஸ்வரன், முத்துமாரி ஆகிய இருவரும் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றபோது, போலீஸாரும் பொதுமக்களும் அவா்களை விரட்டிப் பிடித்தனா். மேலும், காரில் கடத்தி வரப்பட்ட 5 ஆடுகளும் மீட்கப்பட்டன.

விசாரணையில், காளீஸ்வரன் பன்றிகளை வளா்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததாகவும், பரமக்குடி பகுதியில் ஆடுகளைத் திருடி காரில் கடத்தி விற்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து காளீஸ்வரன், முத்துமாரி ஆகிய இருவரையும் கைது செய்து பரமக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT