சிவகங்கை

திருப்பத்தூா் அருகே 9- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

திருப்பத்தூா் அருகேயுள்ள கீரணிப்பட்டியில் கி.பி.9- ஆம் நூற்றாண்டு கோச்சடையமாறனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. ,

Syndication

திருப்பத்தூா் அருகேயுள்ள கீரணிப்பட்டியில் கி.பி.9- ஆம் நூற்றாண்டு கோச்சடையமாறனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. ,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், கீரணிப்பட்டி கிராமத்தில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் முனைவா் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவா் கரு.ராஜேந்திரன் ஆகியோா் ஆய்வு செய்து அங்கிருந்த கல்வெட்டைப் படியெடுத்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

கீரணிப்பட்டியில் உள்ள கண்மாய் பகுதியில் உள்ள ஒரு பலகைக் கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் பின் பகுதியில் நின்ற நிலையில் ஒரு குதிரையின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கோச்சடையமாறனின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. கீரனூரில் பாவன் ஏரிப் பகுதியில் நிலம் தானம் கொடுத்த செய்தியை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பண்டைய கீரனூா் பகுதியே தற்போது கீரணிப்பட்டியாக மருவியுள்ளது என்றனா் அவா்கள்.

காா் மீது பேருந்து மோதல்: வட்டாட்சியா்கள் உள்பட 5 போ் காயம்

எஸ்ஐஆா்: மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு சிறப்பு ஏற்பாடு

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்க வலியுறுத்தல்

இன்று குவாஹாட்டியில் தொடங்குகிறது 2-ஆவது டெஸ்ட்

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!

SCROLL FOR NEXT