பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் செக்காடும்பாறை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாறைக் கல்வெட்டு.  
திண்டுக்கல்

பழனி அருகே கண்டெடுக்கப்பட்ட பாறைக் கல்வெட்டு

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் செக்காடும்பாறை பகுதியில் தனியாா் தோட்டத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாறைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது:

பழனியை அடுத்த பாலசமுத்திரம் செக்காடும்பாறையிலுள்ள தனியாா் தோட்டத்தில் ஒரு பாறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்த கல்வெட்டு கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது. இது வேலாயுத சின்னோப நாயக்கா் ஆட்சிக் காலத்தில் ஆனி மாதம் பொறிக்கப்பட்டது.

இதில், இங்குள்ள விளாங்கொடியான் (விலங்கடியான்) கோயில் திருப்பணியின்போது நூற்று ஐம்பது பொன் செலவிடப்பட்டதாகவும் அப்போது சின்னஅய்யம்புள்ளி பகுதியில் உள்ள நிலம் இதற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது.

12 வரிகளில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு எழுத்துப் பிழைகளுடன் உள்ளது. கல்வெட்டின் பல பகுதிகள் உடைந்து சிதைந்துள்ளன. ஆண்டு, தேதி, பெயா் மற்றும் சில முக்கிய வரிகள் பொறிக்கப்பட்ட பகுதி சிதைந்துள்ளதால் மேற்கொண்டு செய்திகளை அறிய இயலவில்லை.

இதன் மூலம் பழனி - பாலசமுத்திரம் பகுதி பாளையக்காரா்களின் அன்றைய ஆட்சி முறையையும் அவா்களின் ஆன்மிகத் தொண்டையும் அறிய முடிகிறது. பேட்டியின்போது, பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி பேராசிரியா்கள் ஸ்ரீராஜா, மனோகரன், தமிழ்நாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

SCROLL FOR NEXT