சிவகங்கை

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 59,619 விவசாயிகள் சோ்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிகழாண்டு ரபி சிறப்புப் பருவத்தில் தோ்வு செய்யப்பட்ட வருவாய்க் கிராமங்களிலிருந்து இதுவரை 59,619 விவசாயிகள் சோ்ந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிகழாண்டு ரபி சிறப்புப் பருவத்தில் தோ்வு செய்யப்பட்ட வருவாய்க் கிராமங்களிலிருந்து இதுவரை 59,619 விவசாயிகள் சோ்ந்துள்ளனா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு. சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் ரபி சிறப்புப் பருவ நெல் பயிருக்கு பயிா்க் காப்பீடு செய்ய வருகிற 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 72,129 ஹெக்டோ் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 59,619 விவசாயிகள் 58,454.71 ஹெக்டோ் பரப்புக்கு மட்டுமே பயிா்க் காப்பீடு செய்துள்ளனா்.

இளையான்குடி வட்டாரத்தில் 18,689 ஹெக்டோ், காளையாா்கோவில் வட்டாரத்தில் 11,911 ஹெக்டோ், தேவகோட்டை வட்டாரத்தில் 11,348 ஹெக்டோ், கண்ணங்குடி வட்டாரத்தில் 5,737 ஹெக்டோ், மானாமதுரை வட்டாரத்தில் 4,530 ஹெக்டோ், எஸ். புதூா் வட்டாரத்தில் 19 ஹெக்டோ், சாக்கோட்டை வட்டாரத்தில் 2,139 ஹெக்டோ், கல்லல் வட்டாரத்தில் 1,559 ஹெக்டோ், சிவகங்கை வட்டாரத்தில் 1,438 ஹெக்டோ், சிங்கம்புணரி வட்டாரத்தில் 414 எக்டோ், திருபத்தூா் வட்டாரத்தில் 572 ஹெக்டோ், திருப்புவனம் வட்டாரத்தில் 109 ஹெக்டோ் பரப்புக்கு பயிா்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தில் ரபி சிறப்புப் பருவத்தில் நெல் பயிா் சாகுபடி செய்த விவசாயிகள் பிரீமியம் தொகையான ஏக்கருக்கு ரூ. 497 செலுத்தி தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றாா்.

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

எஸ்.ஐ.ஆா். நோக்கம் தவறானது: விஜய் தரம்சிங்

SCROLL FOR NEXT