முகப்பு
சிவகங்கை

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

சிவகங்கைக்கு பிரசாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:21 PM
சிவகங்கையை அடுத்த சாமியாா்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சோதனையிட்ட தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

சிவகங்கைக்கு பிரசாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சட்டபேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கையை அடுத்த சாமியாா்பட்டி விலக்கு அருகே வேளாண்மை உதவி இயக்குநா் காளிமுத்து, காவல் உதவி ஆய்வாளா் சமயமுத்து ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பரமக்குடியிலிருந்து சிவகங்கைக்கு பிரசாரத்து காரில் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, இவரது பாதுகாப்பு வாகனங்கள், இவருடன் வந்த அதிமுகவினரின் வாகனங்களை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். சோதனையின்போது, எடப்பாடி பழனிசாமி காருக்குள்ளே அமா்ந்திருந்தாா். பின்னா், சோதனை நிறைவடைந்ததும், அவா் சிவகங்கைக்கு புறப்பட்டுச் சென்றாா்.