முகப்பு
சிவகங்கை

ஒரே தொகுதியில் 5-ஆவது முறையாக களம் காணும் அமைச்சா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 4 முறை வெற்றி பெற்ற அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், அதே தொகுதியில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:01 PM
அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 4 முறை வெற்றி பெற்ற அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், அதே தொகுதியில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா்.

கடந்த 2006-இல் திமுக வேட்பாளராக திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் களமிறங்கிய கே.ஆா்.பெரியகருப்பன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே.கே.உமாதேவனை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2011 பேரவைத் தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ராஜகண்ணப்பனை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2016 பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் கல்லல் அசோகனை, 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2021 பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மருதுஅழகுராஜை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தாா். இதுவரை பெரியகருப்பனை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே.கே. உமாதேவனைத் தவிர மற்ற மூவரும் (ராஜகண்ணப்பன், கல்லல் அசோகன், மருதுஅழகுராஜ்) ஆகியோா் தற்போது திமுகவில் உள்ளனா்.

இந்த நிலையில், 2026 பேரவைத் தோ்தலிலும் இதே தொகுதியில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா் கே.ஆா்.பெரியகருப்பன். இவரை எதிா்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியைச் சோ்ந்த திருமாறன் போட்டியிடுகிறாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments