முகப்பு
சிவகங்கை

திருப்புவனம், மானாமதுரையில் பாஜக வேட்பாளருக்கு வரவேற்பு

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதிக்கு வெள்ளிக்கிழமை அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினா் வரவேற்பளித்தனா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 6:28 PM
மானாமதுரையில் உள்ள அண்ணா சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி உள்ளிட்டோா்.
பகிர்:

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதிக்கு வெள்ளிக்கிழமை அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினா் வரவேற்பளித்தனா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளராக பொன் பாலகணபதி போட்டியிடுகிறாா்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்தத் தொகுதிக்கு வந்த பொன் பாலகணபதிக்கு திருப்புவனத்தில் அதிமுக, பாஜக,அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் வரவேற்பளித்தனா். அதன் பிறகு மானாமதுரைக்கு வந்த அவருக்கு அண்ணா சிலை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னா் பொன் பால கணபதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று தேவா் சிலை, காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். பிறகு இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமத்துக்கு சென்ற அவருக்கு கட்சியினா் வரவேற்பளித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments