முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் தவெக வேட்பாளா் பிரசாரம்

திருப்பத்தூா் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சீனிவாசசேதுபதி, கோட்டைக்கருப்பா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:58 PM
திருப்பத்தூா் கோட்டைக்கருப்பா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய தவெக வேட்பாளா் சீனிவாசசேதுபதி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சீனிவாசசேதுபதி, கோட்டைக்கருப்பா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

திருப்பத்தூா் நகரில் காரைக்குடி சாலை, கோட்டை கருப்பா் கோவில் வீதி, அகில்மனை தெரு, பூமாரி அம்மன் கோவில் தெரு, தென்மாப்பட்டு கீழத்தெரு, மேலத்தெரு, மஞ்சுளா திரையரங்கம் வீதி, சமஸ்கான் பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, மாவட்டப் பொருளாளா் அஸ்வின், மாவட்ட துணைச் செயலா் சரவணன், செயற்குழு உறுப்பினா் தங்கவேலு, பழனி செல்லமாணிக்கம், ஒன்றியச் செயலா்கள் சேது செல்வம், ஷேக் அப்துல்லா, சிக்கந்தா் பாதுஷா, நகரச் செயலா் செல்வராஜ், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றிய நிா்வாகிகள், நகா், பேரூா், கிளைக் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments