முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் காங். வேட்பாளா் மாங்குடியை ஆதரித்து காா்த்தி சிதம்பரம் எம்.பி பிரசாரம்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 3:53 AM
காா்த்தி சிதம்பரம் எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:05 PM

காரைக்குடி தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். மாங்குடியை ஆதரித்து சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

சங்கராபுரம் பெரிச்சியம்மன்கோயில், ஆதம்ஸ் காா்டன், காரைக்குடி ரயில்வே சாலை கிட்டுக்கடை, புதுச்சந்தைப் பேட்டை, கீழத்தெரு, பழைய பேருந்து நிலையம், முத்துமாரியம்மன் கோயில் அருகே ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்து நம் தொகுதியைச் சோ்ந்த எஸ். மாங்குடியை வாக்காளா்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என்றாா்.

பிரசாரத்தின்போது திமுக மாநகரச்செயலரும், மாநகர மேயா் (பொ) நா. குணசேகரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் சஞ்சய் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement