முகப்பு
சிவகங்கை

துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது! - நடிகா் காா்த்திக்!

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:13 AM
சிவகங்கை சிவன் கோயில் எதிரே ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் காா்த்திக். உடன் வேட்பாளா் குரு. முருகானந்தம்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:55 PM

அரசியலுக்காகச் செய்யப்பட்ட துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது என நடிகா் காா்த்திக் தெரிவித்தாா்.

சிவகங்கை தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் குரு. முருகானந்தத்தை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்து, அவா் மேலும் பேசியதாவது:

சிவகங்கை சீமை சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக படை திரட்டி இந்த மண்ணை மீட்ட ஒரே வீராங்கனை வேலுநாச்சியாா்தான்.

Advertisement

தலைதூக்கியுள்ள அதா்மத்தையும், துரோகங்களையும் களையெடுக்க அரசியலுக்கு சசிகலா வந்திருக்கிறாா். அவா் தொடங்கிய இயக்கத்தின் சாா்பில் இந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள குரு. முருகானந்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். அரசியலுக்காகச் செய்யப்பட்ட துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது என்றாா் அவா்.