முகப்பு
சிவகங்கை

திருக்கோஷ்டியூா் பெருமாள் கோயிலில் ஏப். 30-இல் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை தங்க அனுமன் வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 2:17 AM
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸ விழாவில் 3-ஆம் நாள் வியாழக்கிழமை தங்க அனுமன் வாகனத்தில் எழுந்தருளிய உத்ஸவர்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை தங்க அனுமன் வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, மாலையில் தங்க அனுமன் வாகனத்தில் சா்வ அலங்காரத்துடன் உத்ஸவ பெருமாள் வீதி உலா வந்தாா். தொடா்ந்து 9-ஆம் திருநாளான புதன்கிழமை தலைஅலங்காரம் கண்டருளல் நிகழ்வும், ஏப்.30-இல் 10 ஆம் திருநாளையொட்டி தேரோட்டமும் நடைபெற உள்ளன.