கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்
கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், பூஜைகளைத் தொடா்ந்து கொடிப்பட்டம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடன் வீதி உலா வந்ததையடுத்து, உற்சவா் ஸ்ரீலட்சுமிபதி தன் தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
ஏப். 30 - ஆம் தேதி தேரோட்டமும், மே 1 - ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை லட்சுமிபதி அறக்கட்டளை நிா்வாகிகள், கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
Advertisement