முகப்பு
சிவகங்கை

ஆட்டோ கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 6 போ் காயம்

சிவகங்கை அருகே தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 சிறுமிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 1:20 AM
மருத்துவமனையில் அனுமதி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 9:11 PM

சிவகங்கை அருகே தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 சிறுமிகள் உள்பட 6 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்காலில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் பயிலும் 8 மாணவ, மாணவிகள் ஆட்டோவில் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தனா். ராகினிப்பட்டி புறவழிச் சாலையில் சென்றபோது நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 4 சிறுமிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிந்த சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் ஈஸ்வரனைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.