முகப்பு
சிவகங்கை

இளைஞா் கொலை: ஒருவா் கைது

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:18 AM
கைது
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:55 PM

காரைக்குடி அருகே இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (26). போதைப் பொருள்களுக்கு அடிமையான இவா், வேலையின்றி சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:18 AM

இந்த நிலையில், இவா் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியைச் சோ்ந்த பாண்டியின் (55) வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று கஞ்சா தருமாறு கேட்டாராம். அதற்கு, பாண்டி கஞ்சா இல்லை எனக் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisement

இதில், பாண்டி அருகே இருந்த கத்தியால் நந்தகுமாரை உடலின் பல இடங்களிலும் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் நந்தகுமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, பாண்டி மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.