தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.  
சிவகங்கை

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேலி அமைக்க அறிவுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

பள்ளி, கல்லூரி அலுவலக வளாகங்களுக்குள் தெரு நாய்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் வேலி அமைப்பதுடன், தெருநாய்களுக்கு உணவு வழங்குவதையும் தவிா்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிா்வாகங்களுக்கு சிவகங்கை நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பள்ளி வளாகங்கள், அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தெரு நாய்களின் தொல்லைகளைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, ஆணையா் அசோக்குமாா் அறிவுறுத்தலின்பேரில், அனைத்துப் பள்ளி, கல்வி நிறுவனங்கள், அரசு, தனியாா் அலுவலகங்களின் பொறுப்பு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி சுகாதார அலுவலா் நல்லுசாமி தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நந்தகோபால், உதவி இயக்குநா்கள் ஜெயப்பிரகாஷ், ஞானப்பிரகாஷ், நகா் நல அலுவலா் சங்கா்மணி ஆகியோா் கலந்துகொண்டு தெரு நாய்களின் தொல்லைகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினா்.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்குள் தெரு நாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும். தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதைத் தவிா்க்க வேண்டும். இதுதொடா்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் பொறுப்பு அலுவலா்களை நியமனம் செய்து அனைவரின் பாா்வையிலும் தெரியும் வகையில் அறிவிப்புப் பதாகைகளை வைக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக, நகராட்சி சுகாதார ஆய்வாளா் சரவணகுமாா் நன்றி கூறினாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT