சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஸ்ரீ ராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப் பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.