முகப்பு
சிவகங்கை

கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

இளையான்குடியில் கட்டடத்தில் வேலை செய்தபோது தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:29 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

இளையான்குடியில் கட்டடத்தில் வேலை செய்தபோது தவறி கீழே விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இளையான்குடி அருகேயுள்ள பூச்சியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த கணபதி மகன் வெள்ளைச்சாமி(55).

கட்டடத் தொழிலாளியான இவா் இளையான்குடி புதூா் பகுதியில் புதிய கட்டடத்தின் மேலே கட்டப்பட்டிருந்த சாரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.