மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலின் புதிய தேருக்கு 3 டன் எடையில் இரும்பு வடச் சங்கிலிகள் தயாரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன.
இந்த புதிய தேரின் வெள்ளோட்டமும், தேரில் எழுந்தருளும் தேரடி கருப்பருக்கு குடமுழுக்கும் வருகிற 22- ஆம் தேதி நடைபெறுகின்றன. தற்போது தேருக்கு மெருகூட்டும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், புதிய தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுக்க வசதியாக 3 டன் எடையில் நீண்ட இரும்பு வடச் சங்கிலிகள் தயாரிக்கப்பட்டு சரக்கு வாகனம் மூலம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன.
ராட்சத கிரேன் இயந்திரம் மூலம் இரும்பு டப்பாக்களில் அடைத்து கொண்டுவரப்பட்ட இரும்பு வடச் சங்கிலிகள் தேருக்கு அருகே இறக்கி வைக்கப்பட்டன. இன்னும் ஒரு சில நாள்களில் இந்த இரும்புச் சங்கிலிகள் தேரில் பொருத்தப்படும்.