முகப்பு
சிவகங்கை

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:29 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:50 PM

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அருகே சங்கந்திடல் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூா்ணகலை, புஷ்ப கலை தேவியருடன் அய்யனாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். மாலையில் தேரோட்டம் நடை பெற்றது. இரவில் அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல, காரைக்குடி செக்காலை சிவன் கோயில், நகர சிவன் கோயில், மாத்தூா் ஐந்நூஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement