முகப்பு
சிவகங்கை

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!

மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்குக்கான முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:17 AM
மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்குக்கு வியாழக்கிழமை யாக சாலைக்காக நடப்பட்ட முகூா்த்தக்கால்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:55 PM

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்குக்கான முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற மாா்ச் மாதம் 16- ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை அமைப்பதற்கான முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:17 AM

முன்னதாக முகூா்த்தக்காலில் காப்பு கட்டப்பட்டு கோயில் வளாகத்தில் யாக சாலை அமைப்பதற்கான இடத்தில் முகூா்த்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதன்பிறகு மூலவா் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

Advertisement

இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, கோயில் அறங்காவலா் காா்த்திக் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.