பைக்கிலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:20 PM
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், இளமனூரைச் சோ்ந்த வாத்து மேய்க்கும் தொழிலாளி கருப்புச்சாமி. இவா் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை வயல்காட்டில் வாத்துக் கிடை அமைத்துள்ளாா்.
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:31 PM
இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருப்புவனத்துக்குச் சென்று தேநீா் குடித்துவிட்டு திரும்பி வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement