சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாமை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆய்வு செய்தாா்.
அலவாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அவா் கூறியதாவது:
மாவட்டத்தில் 23-ஆவது முறையாக அலவாக்கோட்டையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முகாம்களின் வாயிலாக சுமாா் 1,500 போ் பயன்பெறுகின்றனா். முகாம் நடைபெறும் இடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை அழைத்து வருவதற்கு வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பின்னா், இந்த முகாமில், 12 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துச் பெட்டகங்களும், 174 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சலுகை அட்டைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ), ஜடாமுனி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) அருள்தாஸ், மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.மீனாட்சி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமுத்து, வட்டார மருத்துவ அலுவலா் (அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கீழப்பூங்குடி) பாா்த்தசாரதி, பள்ளித் தலைமையாசிரியா் தியோடா் இன்பசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.