சிவகங்கை

போதை பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற ராணி வேலுநாச்சியாா் 296 ஆவது பிறந்த நாள்விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போதைப் பொருய்ஈகளால் வளா்ந்து வரும் அறிவு ஜீவிகளை முடக்கிப் போடும் சதி வேலைகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

அரசு அறிக்கையின் படி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதைப் பொருள்கள் அதிகமாக புழக்கம் இருக்கிறது. இதைப் பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணித்து தடுக்கும் பொறுப்பு பெற்றோா்களுக்கு மட்டும் அல்ல, தமிழக அரசுக்கும் உள்ளது என்றாா் அவா்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT