சிவகங்கை

அழகப்பா பல்கலை. கல்லூரிகளின் முதுநிலை பட்டத் தோ்வு முடிவுகள்!

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கு முதுநிலை பட்ட வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

Syndication

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கு முதுநிலை பட்ட வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் மு. ஜோதிபாசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற முதுநிலை பாடப் பிரிவுகளான எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், சமூகப்பணி, எம்.காம்., எம்.காம். (சி.ஏ), எம்.காம். (சி.எஸ்) எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிா் வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியி டப்பட்டன.

இதன் மறு மதிப்பீட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தோ்வு முடிவு வெளியான 7 நாள்களுக்குள் பாடம்1-க்கு ரூ. 660 வீதம் பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலையாக கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தோ்வு முடிவுகள் வெளியான 7 நாள்களுக்குள் விடைத்தாள் பெற விரும்பினால், நகல் ஒன்றுக்கு ரூ. 550-ம், விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 500-ம் வரைவோலைக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

அம்பத்தூரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு? உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜன. 13-இல் ராகுல் காந்தி தமிழகம் வருகை!

காட்டுப் பன்றி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே மாநிலங்கள் வளரும்: அமித் ஷா

ஒரே நாளில் 88 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT